திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா இன்று (ஆகஸ்ட் 10) இடுக்குப் பிள்ளையார் கோயில் நான்காவது தெருவில் நடைபெற்றது. இவ்விழாவினை நேரு யுவகேந்திரா, ஸ்ரீ அம்மையப்பர் சித்தர் பீடம், சுவாமி விவேகானந்தா மகளிர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து நடத்தின. இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அரசு மருத்துவர் பாலமுரளி, மரக்கன்றுகளை நடும் விழாவைத் தொடங்கிவைத்தார்.
கிரிவலப்பாதையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா! - திருவண்ணாமலை கிரிவலப்பாதை மரம் நடுவிழா
திருவண்ணாமலை: கிரிவலப் பாதையைில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில் அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
![கிரிவலப்பாதையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா! திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள் திருவண்ணாமலை கிரிவலப்பாதை மரம் நடுவிழா thiruvannamalai district news](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8370696-thumbnail-3x2-thiruva.jpg)
தி.மலை கிரிவலப்பாதையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
கிரிவலப்பாதையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவைத் தொடங்கி வைத்த அரசு மருத்துவர்
ஸ்ரீ அம்மையப்பர் சித்தர் பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ கௌரி இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கிரிவலப் பாதையைச் சுற்றிவரும் பக்தர்கள் தூயக் காற்றையும் குளுமையையும் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுவதாக விழாவை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:முழு ஊரடங்கு: பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்களால் பரபரப்பு!