தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் குறைதீர்வு நாளில் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து மனு அளித்த விவசாயிகள் - மக்கள் குறை தீர்வு நாள்

மக்கள் குறைதீர் நாளில் குடுகுடுப்பைக்கார வேடமணிந்தும் குறி சொல்லியும் விவசாயிகள் நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் குறைதீர்வு நாளில் குடுகுடுப்பு வேடமடைந்து மனு
மக்கள் குறைதீர்வு நாளில் குடுகுடுப்பு வேடமடைந்து மனு

By

Published : Oct 31, 2022, 11:01 PM IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக விவசாய சங்கத்தினர் குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்து தாங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்ககவில்லை என்று வலியுறுத்தி நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் குறை தீர்வு நாள் மற்றும் விவசாயக்கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளிக்கப்படும் மனுக்களுக்கு முறையான பதில் கிடைப்பதில்லை என்றும், திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது என்றும் தெரிகிறது.

இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேளாண்மைத்துறையில் எந்த ஒரு அதிகாரிகளும் யூரியா தட்டுப்பாட்டை போக்குவதற்கு முறையாக செயல்படவில்லை எனவும்; விளை பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை இதுவரை முறையாக வழங்கப்படவில்லை என்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் குறைதீர்வு நாளில் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து மனு அளித்த விவசாயிகள்

மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை சுதந்திரமாக செயல்பட வலியுறுத்தியும், அப்போதுதான் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் நினைத்து, குடுகுடுப்பைக்காரர் போல் வேடம் அணிந்து குடுகுடுப்பை அடித்து மனுக்களுக்கு மை தடவிக்கொடுத்து நூதனப்போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:'பதிவுத்துறையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.23,066 கோடி வருவாய்' - அமைச்சர் பி.மூர்த்தி

ABOUT THE AUTHOR

...view details