தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரகசிய இறைச்சி விற்பனையை ஊக்குவித்த மக்கள்!

திருவண்ணாமலை: ஆட்சியரின் உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சி, மளிகை கடைகளை காவல்துறை எச்சரித்தது.

ரகசிய இறைச்சி விற்பனையை ஊக்குவித்த மக்கள்!
ரகசிய இறைச்சி விற்பனையை ஊக்குவித்த மக்கள்!

By

Published : Apr 26, 2020, 5:14 PM IST

திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியில் உள்ள மாடர்ன் சிக்கன் சென்டர், மளிகை கடையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி விற்பனை நடைபெற்றது. காவல்துறை எச்சரித்த பின்னர் விற்பனை நிறுத்தி, கடையை மூடினர்.

ரகசிய இறைச்சி விற்பனையை ஊக்குவித்த மக்கள்!

ஆனால், மக்கள் விடாப்பிடியாக அந்த இடத்திலேயே கூடி நின்று இறைச்சி வாங்க காத்திருந்தனர். இதையடுத்து, காவல் அலுவலர் நகர்ந்ததும், இறைச்சிக் கடைக்காரர் இறைச்சிப் பைகளில், மறைமுகமாக இறைச்சி விற்பனை செய்தார். அந்த கடையில், இறைச்சியை வெட்டுபவர்கள் பத்து பேரும், சிறிய அறையில் மாமிசத்தை வெட்டி வெளியில் விற்பனை செய்வது, பாதுகாப்பில்லாதது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதே, தகுந்த இடைவெளியை கடைபிடித்து கரோனா பரவாமல் தடுக்கத்தான். இந்நிலையில், மக்களின் அலட்சிய செயல் கரோனா குறித்த அச்சத்தைப் அதிகரிக்கிறது. அதேபோல், மளிகை கடை திறந்திருந்ததால் கடையில் வைக்கப்பட்டிருந்த எடை போடும் தராசு, எடைக்கற்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

இதையும் படிங்க:பிறந்தநாள் கேக்குக்கு முகக்கவசம் - கணவனை அசத்திய மனைவி!

ABOUT THE AUTHOR

...view details