தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகக்கவசம் அணியாமல் 'ஹாயாக' நடமாடும் மக்கள்: கரோனா பரவும் அபாயம்! - people neglect masks

திருவண்ணாமலை: கரோனா பெருந்தொற்று பரவலின் வீரியம் புரியாமல் மக்கள் முகக்கவசமின்றி சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

முகக்கவசம் அணியாமல் ஹாயாக நடமாடும் மக்கள்: கரோனா பரவும் அபாயம்!
முகக்கவசம் அணியாமல் ஹாயாக நடமாடும் மக்கள்: கரோனா பரவும் அபாயம்!

By

Published : May 24, 2020, 6:18 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மங்கலம், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருவதால், கரோனா பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது.

இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருபவர்களிடையே கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, பெருந்தொற்று பரவலைத் தடுக்கிறது. ஆனால், பொதுமக்கள் இதனைப் பொருட்படுத்தாமல், வெளியில் முகக்கவசம் இல்லாமல் நடமாடுகின்றனர்.

மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம். ஆதலால், பேரூராட்சிகள், ஊராட்சிகள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், முகக்கவசம் அணியாமல் வருபவருக்கு அபராதம் வசூல் செய்யவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 182 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 81 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கால் வாழ்விழந்த சுற்றுலா வழிகாட்டிகள்! வாழ்விற்கு வழிகாட்டுமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details