ஊரடங்கு உத்தரவு தளர்வு வந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில், பணம் எடுப்பதற்காகவும், கணக்கில் பணம் செலுத்துவதற்காக 500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் அங்கு தகுந்த இடைவெளி கேள்விக்குறியானது.
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று அதிகமாகி தற்போது, திருவண்ணாமலையிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமலும், வங்கியில் அதிகமான கூட்ட நெரிசல் தினம்தோறும் ஏற்பட்டு வருவதாகவும், அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் வங்கியில் குவிந்த மக்கள் மேலும், இந்த ஊரடங்கால் வேலையின்றி இருக்கும் கூலித் தொழிலாளர்கள் தற்போது வங்கி கணக்கில் பணம் எடுப்பதற்காக அங்கு அதிகமாக குவிகின்றனர். எனவே, வங்கி நிர்வாகம் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நபர்களை மட்டும் வரவைத்து, பணத்தை எடுக்கவும், செலுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், வங்கிக்கு வரும் மக்களிடம், வங்கி நிர்வாகம் தகுந்த இடைவெளியை கடைபிடித்து நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:கரோனா வார்டில் பணியாற்றிய செவிலியர் 7 பேருக்கு கரோனா!