திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 30 ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக வளர்க்க இயலாத காரணத்தால் பெற்றோர், அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் அக்குழந்தையை சேர்க்க எண்ணினர். அதைத்தொடர்ந்து, அக்குழந்தை மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் உடனடியாக சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
பெண் குழந்தையை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்த பெற்றோர்! - பெண் குழந்தை
திருவண்ணாமலை: குடும்ப சூழ்நிலை காரணமாக வளர்க்க முடியாததால் பெண் குழந்தையை தொட்டில் குழந்தை திட்டத்தில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.
child
இந்நிலையில், தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட அப்பெண் குழந்தைக்கு 'ஆதினி' எனப் பெயர் சூட்டிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைத்தார். அப்போது மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்து மாணவியைக் கத்தியால் தாக்கிய இளைஞர் கைது