திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடி கிராமத்தில் கிராம ஊராட்சியின் சார்பில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது கரோனா வைரஸ் போன்று ஒருவர், தலையில் கிரீடம் அணிந்து உடல் முழுவதும் கரோனா மாதிரி படம் வரைந்து, கவச உடை அணிந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது கரோனா வைரஸ் எந்த நாட்டில் உருவானது, எவ்வாறு பொது மக்களிடையே பரவியது, அந்த நோயிலிருந்து நாம் எவ்வாறெல்லாம் தற்காத்துக்கொள்ள முடியும் என்பது பற்றி, கரோனா வேடமணிந்தவர் கிராம மக்களிடையே தெளிவாக எடுத்துரைத்தார்.
அனைவரும் ஒரு நாளைக்கு 20 முறை கைகளைக் கழுவ வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், மத்திய - மாநில அரசுகள் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும் என்று கூறி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.