ஏப்ரல், மே மாதங்களில் வாட்டி வதைக்கும் கோடை வெயிலை சமாளிப்பதற்காக மக்கள் குளிர்பானங்கள், இளநீர், பனை நுங்கு ஆகியவற்றை நாடி செல்வது வழக்கம். அந்த வகையில், உடம்பின் சூட்டை தணிக்கும், உடல் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளும் பனை நுங்கு வாங்குவதற்கு மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஒரு மாத காலமாக தடை உத்தரவால் வருமானமின்றி தவித்த நுங்கு வியாபாரிகள், மாவட்ட நிர்வாக அறிவித்துள்ள தளர்வு பனை நுங்கு வியாபாரிகளின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது.