திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், பாலியப்பட்டு ஊராட்சிப் பகுதியில் சிப்காட் அமைக்க விளைநிலங்கள் மற்றும் வீடுகளை கையகப்படுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சார்பாகத் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டம் இன்றுடன்(மார்ச் 31) 100ஆவது நாளை எட்டியுள்ளது.
100ஆவது நாளான இன்று, மே 17 இயக்கத்தினரும் இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பொருட்களை திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.