திருவண்ணாமலை மாவட்டம், இனாம்காரியந்தல் கிராம ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கால்நடை கிளை மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அப்போது கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளையும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி மோகன், கால்நடை மருத்துவர்கள், கால்நடை விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட கலந்துகொண்டனர். கால்நடை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய கால்நடை கிளை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனாம்காரியந்தல், வெங்காய வேலூர், தீபம் நகர், சத்திரம், இனாம்காரியந்தல் புதூர், இந்திரா நகர், வேடி நகர், அன்னக்கிளி கொட்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கால்நடை விவசாயிகள் பயன் பெறுவார்கள். மேற்கண்ட பகுதிகளில் உள்ள மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள், எருமைகள், எருதுகள், ஆடுகளுக்கு இனாம்காரியந்தல் கால்நடை கிளை நிலையத்தில் செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தடுப்பூசிகள் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்படும்.
கால்நடை கிளை நிலையத்தை திறந்து வைக்கும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இந்த கிளை நிலையம் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாள்கள் தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திடீரென வீட்டை காலி செய்ய சொன்னால் எங்கே செல்வோம் - கிராம மக்கள் வேதனை