திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தினுள் உள்ள உழவர் சந்தைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்வர். அவர்கள் செல்லக்கூடிய வழியானது சேறும் சகதியுமாக துர்நாற்றம் பரப்பிக்கொண்டும் பார்ப்பதற்கு சகிக்க முடியாத நிலையிலும் காணப்படுகிறது.
இந்நிலையில் அங்கு தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சலை பரப்பும் அபாயமும் உருவாகி வருகிறது. மேலும் அவ்வழியில் உள்ள கால்வாய் திறந்தே உள்ளதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இந்த அவல நிலையை போக்க வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.