திருவண்ணாமலை:பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொங்கியது.
திருக்கார்த்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்க்காக https:// annamalaiyar.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதள வழியாக வரும் 4ஆம் தேதி காலை 10 மணிக்கு கட்டண தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு துவங்க உள்ளது.
பரணி தீப தரிசனத்திற்கு 500 ரூபாய் கட்டணத்தில் 500 நபர்கள் மற்றும் மகா தீப தரிசனத்திற்கு 500 ரூபாய் மற்றும் 600 ரூபாய் கட்டணத்தில் 100 மற்றும் 1000 நபர்களுக்கு ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.