திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனிவேல் இவருக்கு சுதா என்கிற மனைவியும், ஆகாஷ், பாரத், தமிழரசு என்ற மூன்று மகன்களும் உள்ளனர். அதே பகுதியில் உள்ள தர்மலிங்கம் என்பவரின் வீடும், பழனிவேல் வீடும் முன்னும், பின்னுமாக அருகருகே அமைந்துள்ளது.
கழிவுநீர் தேங்கியதால் ஏற்பட்ட மோதல்: ஒருவர் உயிரிழப்பு - திருவண்ணாமலை மாவட்ட குற்ற செய்திகள்
திருவண்ணாமலை: வீட்டின் வாசலில் கழிவுநீர் தேங்கிய பிரச்னையால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் உயிரிழந்தார்.
பழனிவேல் வீட்டில் உள்ளவர்கள் தண்ணீர் அதிகமாக ஊற்றி குளித்ததால் கழிவு நீர் அதிகமாக தர்மலிங்கம் வீட்டு வழியே சென்றுள்ளது. இதையடுத்து தர்மலிங்கம் இதுகுறித்து கேட்டதால், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது தர்மலிங்கம், பழனிவேலை தாக்கியுள்ளார். இதில் கீழே விழுந்த பழனிவேலுக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் பழனிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வெறையூர் காவல் துறையினர், தர்மலிங்கத்தைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.