திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவலறிந்து செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி சில கடைகளில் சோதனை மேற்கொண்டார்.
பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் அந்த சோதனையின்போது செங்கம் கணேசர் காய்கனி மண்டியில் வைக்கப்பட்டுள்ள ஒரு கடையில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான 100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் செங்கம் பேரூராட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 144 தடை உத்தரவின்போது எந்த கடைகளும் திறந்திருக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் இந்நிலையில் திறந்துவைத்து அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கண்டெடுக்கப்பட்ட கடைக்கு அபராதம், சீல் வைப்பது போன்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 தாக்கம்: ஸ்விகி, சொமாட்டோ டெலிவரிக்குத் தடை!