திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்ராவந்தவாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (48). இவர், நேற்றிரவு 7 மணியளவில் தனது வீட்டிலிருந்து பால் ஸ்டோருக்கு இருசக்கர வாகனத்தில் பால் எடுத்துச்சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு - அடையாளம் தெரியாத வாகனம் மோதி பால்காரர் மரணம்
திருவண்ணாமலை: இருசக்கர வாகனத்தில் பால் எடுத்துச் சென்றவர் மீது வாகனம் ஒன்ற்ய் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
accident
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்தது யார் என்று காவல் துறையினர் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
TAGGED:
thiruvannamalai crime news