பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவுநாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறை சார்பில், நேற்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பொது விருந்து வழிபாடு நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி. சக்கரவர்த்தி, பக்தர்கள், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொது விருந்தில் கலந்துகொண்டு உணவு உட்கொண்டனர்.