தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 15, 2021, 6:15 PM IST

ETV Bharat / state

மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மூதாட்டி!

திருவண்ணாமலை: மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மூதாட்டியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

kerosene
kerosene

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சீசொர்பணந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி மீனாட்சி (61). இவர் கடந்த 30 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இன்று (பிப்ரவரி 15) மீனாட்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் இருந்த காவல்துறையினர் மீனாட்சி கொண்டு வந்த பையை சோதனையிட்டனர். அதில் சிறிய கேனில் மண்ணெண்ணெய் வைத்திருந்தது தெரியவந்தது.

மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மூதாட்டி

இதனையடுத்து மீனாட்சியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், மீனாட்சியின் மகள் பெயரில் தனக்கு சொந்தமான நிலத்தை எழுதி வைத்ததாகவும் அந்த நிலைத்தை அவரது மகளின் கணவர் அடமானம் வைத்து விற்க முயற்சி செய்துள்ளார். எனவே அந்த நிலத்தை மீண்டும் தனது பெயரை மாற்றி தரக் கோரியும், தான் இறந்த பிறகே அதை மகள் பயன்படுத்தும் வகையில், மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து மீனாட்சியை காவல்துறையினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அழைத்துச் சென்றனர். மனுவை பெற்றுக்கொண்ட வருவாய் அலுவலர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மகனிடமிருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி மூதாட்டி மனு!

ABOUT THE AUTHOR

...view details