தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிரிழப்பு! - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை: செங்கம் அருகே விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்த மூதாட்டியின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

விவசாய கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
விவசாய கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

By

Published : May 19, 2020, 12:34 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அச்சுதஉடையார். இவரது மனைவி ருக்கு. இவருக்கு கண்ணில் பார்வை குறைபாடு இருந்துவந்தது.

மூதாட்டி ருக்கு கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி வீடு திரும்பவில்லை. இதனால், அவரது கணவர், உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்று காரப்பட்டு பகுதியிலுள்ள லோகநாதன் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் பெண் சடலம் இருப்பதைக் கண்டு புதுப்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

விவசாய கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர், செங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கிணற்றில் மிதந்த உடலை கைப்பற்றி அடையாளம் காணப்பட்டது.

அது மூன்று நாள்களுக்கு முன்பு காணாமல் போனது, ருக்கு என்பது தெரியவந்தது. பின்னர், இது குறித்து ருக்குவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், அங்கு வந்த அவரது உறவினர்கள் அது ருக்கு என்பதை உறுதிசெய்த பிறகு அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூதாட்டி கிணற்றி தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலையா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: 40 அடி கிணற்றில் தவறி விழுந்த பெண்: உயிருடன் மீட்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details