தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், திருவண்ணாமலை லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வழிநடத்திநர்களுக்கான 'போஷன் அபியான்' ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழா திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்திருந்த ஊட்டச்சத்து சம்பந்தமான ஸ்டால்களைப் பார்வையிட்டார்.
போஷன் அபியான் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி! மேலும் இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு, ஊட்டச்சத்து மிக்க உணவினை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு பெற்றனர்.
என்யுஎல்எம் (NULM) சமுதாய அமைப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து இருந்தனர். நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் திட்ட அலுவலர் செய்திருந்தார்.
இதையும் படிங்க: ஊட்டச்சத்து குறித்து 100 வகை சிறுதானிய உணவுக் கண்காட்சி!