தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஓட்டு கேட்டு யாரும் இனி வரக்கூடாது' - குடிநீர் வழங்காததால் பெண்கள் ஆவேசம்! - Women struggle with empty pitchers

திருவண்ணாமலை: 3 மாதங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.

காலி குடங்களை கையில் ஏந்திய படி போராட்டம்
காலி குடங்களை கையில் ஏந்திய படி போராட்டம்

By

Published : May 19, 2020, 3:44 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம் மேல்கரிப்பூர் கிராமத்தில் 3 மாதங்களாக தங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு, குடிநீர் வழங்காததைக் கண்டித்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் ஆவேசமாகப் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது, 'கிராமத்தில் உள்ள தங்கள் தெருவுக்குப் பல மாதங்களாக தண்ணீர் வரவில்லை எனவும், மற்ற தெருக்களில் இருப்பவர்கள் மின்மோட்டார் இணைப்பு கொண்டு தண்ணீரை உறிஞ்சி எடுத்துக் கொள்வதால், நீண்ட தூரம் சென்று அலைந்து திரிந்து தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது’ என்றும் பெண்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

மேலும் தங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை சந்தித்து முறையிட்டால், அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என நினைத்துக்கொண்டு, இப்பிரச்னைக்குப் பதிலளிக்க முடியாது என்று அலட்சியத்துடன் கூறுவதாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய அப்பகுதி பெண்கள், 'ஊராட்சி மன்றத் தலைவரே இல்லை என்று நாங்கள் கருதிக் கொள்கிறோம். எனவே யாரும் எங்கள் தெருவுக்கு வாக்கு கேட்டு இனிமேல் வரக்கூடாது. வருவதற்கு அனுமதிக்க மாட்டோம்' என்று காட்டமான வார்த்தைகளைக் கூறி ஆவேசம் அடைந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வராததைக் கண்டித்து ஆவேசத்துடன் போராட்டம் நடத்தியது, அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:திருவண்ணாமலையில் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம்

ABOUT THE AUTHOR

...view details