திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த மோத்தக்கல் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழலாளி வேடியபப்பன். இவரது மகன் ஜெயக்குமார் (24). கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயா (22). இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
திருமணமாகி 45 நாள்கள் ஆகியும் பெண்ணின் வீட்டார்கள் திருமணத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு, அப்பெண்ணிற்கும் இனி எந்த தொடர்பும் கிடையாது என அப்பெண்ணின் வீட்டார்கள் கூறியதாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த விஜயா இன்று தனது கணவர் வீடடில் தூக்கிட்டு தற்கொலை செய்துகெண்டார்.
இதனையறிந்த விஜயாவின் கணவர் ஜெயக்குமார், இனி என் காதல் மனைவி இல்லாமல் வாழ முடியாது என அவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.