தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட திருவண்ணாமலை எஸ்பி! - தடுப்பூசி போட்டுக்கொண்ட எஸ்பி

திருவண்ணாமலை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று (பிப்.03) கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை அடுத்து இன்று (பி.ப்.04) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட திருவண்ணாமலை எஸ்பி
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட திருவண்ணாமலை எஸ்பி

By

Published : Feb 4, 2021, 5:25 PM IST

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முதலமைச்சரின் உத்தரவுபடி கரோனா தடுப்பூசி படிப்படியாக போடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முன் களப்பணியாளர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் எனப் பொது மக்களுடன் நேரடி தொடர்பில் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரையில் 3 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில், பொதுமக்களிடையே கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று (பிப்.03) திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று (பிப்.4) காவல் துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து மற்ற காவல் துறையினருக்குத் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நெல்லை ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details