திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 10) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான சி.திருமகள் இதற்கு தலைமை தாங்கினார்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 67 வழக்குகளுக்கு தீர்வு - திருவண்ணாமலை லேட்டஸ்ட் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 67 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டது.
67 வழக்குகளில்
அதில் வங்கி சார்ந்த வழக்குகள், போக்குவரத்து வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் என மொத்தம் 67 வழக்குகள் ரூ 1.95 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
மேலும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் தங்களது வழக்கறிஞர்களுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.