தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் நரிக்குறவர்கள் நடனமாடி வாக்காளர் விழிப்புணர்வு! - tiruvannamalai news

திருவண்ணாமலை: திருநங்கை, நரிக்குறவர் வாக்காளர்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நரிக்குறவர்கள் நடனமாடி வாக்காளர் விழிப்புணர்வு
நரிக்குறவர்கள் நடனமாடி வாக்காளர் விழிப்புணர்வு

By

Published : Mar 5, 2021, 8:21 AM IST

திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய மைதானத்தில் திருநங்கை, நரிக்குறவர் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நேற்று (மார்ச்4) நடைபெற்றது .

நரிக்குறவர்கள் நடனமாடி வாக்காளர் விழிப்புணர்வு

இந்த நிகழ்ச்சியில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் ( EVM ) மற்றும் வாக்காளர்கள் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி (VVPAT) மூலம் திருநங்கை, நரிக்குறவர் வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த தேர்தல் விளக்க பரப்புரை பாடலுக்கு நரிக்குறவர்கள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க...குரலற்றவர்களின் குரலாக ஒலித்த ஈடிவி பாரத்திற்கு தெற்காசிய டிஜிட்டல் மீடியா விருது!

ABOUT THE AUTHOR

...view details