திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 'நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் நன்றி அன்னையர் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,"பெண்களின் முன்னேற்றத்துக்காக கடந்த ஆண்டு மட்டும் 275 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 660 கோடி ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. நிதி உதவி பெறும் பெண்கள் தாங்கள் முதலீடு செய்யும் பணம் உறுதியான முன்னேற்றத்தை அடையச் செயல்பட வேண்டும்.