திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் ஊராட்சி. பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர், கூலித்தொழிலாளி வடிவேல். இவரது மனைவி சென்னம்மாள் ( 33 ). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இவர்களது மூத்த மகள் மோனிஷா (12), அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில், 7 ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 23) சென்னம்மாள், தனது மகள் மோனிஷாவை அழைத்து கொண்டு அருகிலுள்ள குட்டையில், துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது மோனிஷா குட்டையில் இறங்கி குளித்த போது நீரில் மூழ்கியுள்ளார்.