சாதி சான்றிதழ் கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை திருவண்ணாமலை:பூர்வகுடிகளாக கருதப்படும் பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வில் நாள்தோரும் பல்வேரு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். சமூகம், பொருளாதாரம், கல்வி என அனைத்திலும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம் உள்ளது. வருமை, உடல் நளப்பிரச்னை ஆகியவற்றுடன் வாழும் இவர்கள், தங்கள் வாழ்க்கை மேம்பட படிப்பு மட்டுமே கைகொடுக்கும் என நம்புகின்றனர். தங்கள் பிள்ளைகள் படித்து முன்னேற வேண்டும் என நினைக்கின்றனர்.
இந்நிலையில் இவர்கள் தங்கள் படிப்பை தொடர, இன்று வரை பல்வேரு சிக்கல்கள் இருந்து வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக இன்று (ஆக.7) 300 க்கும் மேற்பட்ட இந்து கணிக்கர் பழங்குடியினர் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் இதுவரை அளிக்கப்படவில்லை என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவிள்ளை என வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.. வீடு கட்டித் தருவதாகக் கூறி வக்கீல் மோசடி செய்ததாகப் புகார்!
இதனால் தங்களின் பிள்ளைகளின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக கூறினர். மேலும் அரசின் பல நலத்திட்ட உதவிகள் தங்களுக்கு கிடைக்காமல் போவதாகவும் அவர்கள் கூறினர். இதனால் அவர்கள் தங்களது பிள்ளைகளுடன் குடுகுடுப்பை அடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் பலரும் ஈடுபட்டு தங்கள் உரிமைக்காக குறல் எழுப்பினர்.
சாதி சான்றிதழ் கேட்ட இவர்களது இந்த போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி அமைந்துள்ள திருவண்ணாமலை - வேலூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை அங்கிருந்து அனுப்பினர். மேலும் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளிக்கவும் அறிவுறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆந்திராவில் அரங்கேறிய வெறிச்செயல்: தந்தையின் கொலை சதியில் இருந்து துரிதமாக மீண்ட 13 சிறுமி!