திருவண்ணாமலையை அடுத்த கீழ்படூர் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வராஜ். விவசாயியான இவர் நேற்று வங்கியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயை எடுத்துவந்து தனது வீட்டிலுள்ள பீரோவில் வைத்துள்ளார். பிறகு இரவு உணவை முடித்துவிட்டு செல்வராஜும் அவரது குடும்பத்தினரும் வீட்டின் வெளியே படுத்து உறங்கியுள்ளனர்.
இதனை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகைகள், 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை காலையில் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ், கொள்ளை சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் டிஎஸ்பி அண்ணாதுரை, காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகியோர் கொள்ளை நடைபெற்ற வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் யார் என்று காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘வார்’ திரைப்படத்தை வெளியிடத் தடை