தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக வேட்பாளருமான பன்னீர்செல்வம், திருவண்ணாமலையிலுள்ள கலசப்பாக்கம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மதியம் 3 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்கத் தயாரான அவர், தன்னுடன் வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள் வெயிலில் சோர்ந்து இருப்பதைக் கண்டு வருத்தம் அடைந்தார். தொடர்ந்து அவர்களுக்கு தெம்பூட்டும் வகையில், எறையூர் கிராமத்தில் இருந்த தேநீர் கடைக்குள் சென்று தொண்டர்களுக்கு தன் கையால் தேநீர் தயாரித்துக் கொடுத்தார்.