திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி பணகுடி பேரூராட்சியில் வசிக்கும் பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 18 வார்டுகளை சேர்ந்த 108 பேருக்கு மானிய உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி பணகுடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
108 பயனாளிகளுக்கு மானிய உதவித் தொகை வழங்கிய எம்எல்ஏ இன்பதுரை - 108 பயனாளிகளுக்கு மானிய உதவித் தொகை வழங்கிய எம்எல்ஏ இன்பதுரை
திருநெல்வேலி: பணகுடி பகுதியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் மூலம் 108 பயனாளிகளுக்கு மானிய உதவித் தொகையை எம்எல்ஏ இன்பதுரை வழங்கினார்.
மானிய உதவித் தொகை வழங்கிய எம்எல்ஏ
இந்த நிகழ்ச்சியில் பணகுடி பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் தலைமை வகித்தார். மேலும், ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 108 பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வழங்கப்படும் உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நான்கு கட்டங்களாக 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.