தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கோயில்களில் விஐபி பாஸ் என்பது முற்றிலும் இல்லை" - அமைச்சர் சேகர்பாபு

Minister Sekar Babu press meet: திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு அதிக பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஐபி பாஸ் என்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Minister Sekar Babu press meet
அமைச்சர் சேகர்பாபு பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 2:21 PM IST

இந்து சமயஅறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆகும். மேலும், அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், அண்ணாமலையார் கோயில் வளாகம் மற்றும் கோயிலுக்குள் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோயில் வளாகம் மற்றும் கோயிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது திருக்கார்த்திகை தீபத் திருவிழாவன்று பக்தர்கள் கோயிலுக்குள் வரும் வழி, வெளியே செல்லும் வழி, குடிநீர் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், தீபத் திருவிழாவின்போது கூட்ட நெரிசல் ஏற்படாத வகையிலும், விரைவில் சாமி தரிசனம் மேற்கொள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “திருவிழா காலங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகத்துடன் ஆய்வு செய்கிறது. கடந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் வந்தனர். இந்த ஆண்டு 25 சதவீத பக்தர்கள் கூடுதலாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான போக்குவரத்து வசதிகள், கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகள் என அனைத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

தற்காலிக பேருந்து நிலையங்கள், சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையைக் கண்காணிப்பது ஆகியவை கண்காணிக்கப்பட உள்ளது. குறிப்பாக விஐபி பாஸ் (VIP Pass) முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. போலி அடையாள அட்டையைத் தடுக்கும் வகையில் கோயில் நுழைவாயிலில் காவல்துறை மூலம் பரிசோதனை செய்து, பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கோயிலுக்குள் வரும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்யவும், உள்ளூர் பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்ய போதிய ஏற்பாடுகள் செய்யப்படும்.

அறுபடை வீடு தொடங்கி திருச்செந்தூர் முருகன் கோயில் வரை அனைத்து கோயில்களிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதை தாங்கிக் கொள்ள முடியாத சிலர், எப்போதுமே திமுக அரசு மீது புழுதி வாரி தூற்றுவதுபோல், கடந்த 2018ஆம் ஆண்டு உயர்த்திய கட்டணத்தை தற்போது உயர்த்தியதுபோல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10,11 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details