தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய திட்டங்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பார்வை - சீராக குடிநீர் வழங்க உத்தரவு - Minister Savior Ramachandran views new projects

திருவண்ணாமலை: புதிதாக அமைக்கப்பட்ட நீர்தேக்க தொட்டி, சுத்திகரிப்பு நிலையங்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பார்வை
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பார்வை

By

Published : May 29, 2020, 10:30 PM IST

திருவண்ணாமலை நகரில் உள்ள வ.உ.சி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கும் நீர்தேக்க தொட்டிகள், சுத்திகரிப்பு மையங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி வழங்கவும் நீர்தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து குளோரின் கலந்த குடிநீர் விநியோகிக்கவும் அவர் நகராட்சி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

தற்போது திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டு பகுதிகளில் வசிக்கும் 30,466 குடும்பங்களுக்கு 19,339 குடிநீர் இணைப்பு நகராட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details