தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சரின் செலவில் தினமும் 2000 பேருக்கு இலவச உணவு! - திருவண்ணாமலையில் அமைச்சரின் செலவில் தினமும் 2000 பேருக்கு இலவச உணவு

திருவண்ணாமலை: அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் தனது சொந்த செலவில் நாள்தோறும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு அம்மா உணவகம் மூலம் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கிவருகிறார்.

இலவச உணவு வழங்கிய அமைச்சர்
இலவச உணவு வழங்கிய அமைச்சர்

By

Published : Apr 16, 2020, 2:19 PM IST

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகம், மளிகைக்கடை, காய்கறிக் கடை, தேநீர் விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆதரவற்ற, ஏழை, எளிய பொதுமக்கள் உணவு கிடைக்காமல் தவித்துவருவதைக் கருத்தில்கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு திருவண்ணாமலை நகரில் உள்ள இரண்டு அம்மா உணவகம், ஆரணி நகரில் ஒரு அம்மா உணவகம் என அம்மா உணவகங்களில் காலை நேரத்தில் இட்லி, உப்புமா, மதியம் நேரத்தில் சாம்பார் சாதம், தயிர் சாதம் இரவு நேரத்தில் இட்லி கிச்சடி என மூன்று வேளையும் இலவசமாக கடந்த 21 நாள்களாக அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் தனது சொந்த செலவில் வழங்கிவந்தார்.

இந்நிலையில் 144 தடை உத்தரவு அடுத்த மாதம் 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டதால் அம்மா உணவகத்தில் தொடர்ந்து மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான மொத்த செலவையும் அமைச்சரே ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலவச உணவு வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை நகரின் பழைய அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் ஆய்வுமேற்கொண்டார். அப்போது அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண்களிடம் உணவு வாங்க வருபவர்களிடம் முகம் சுளிக்காமல் தாராளமாகத் தேவையான அளவு உணவு வழங்க வேண்டும் என்றும், சமூக இடைவெளியைப் பின்பற்றி வரிசையில் நிற்கவைத்து உணவு வழங்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: ஸ்ரீலஸ்ரீ சடை சுவாமிகள் ஆஸ்ரமம் சார்பில் சாதுக்களுக்கு இலவச உணவு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details