தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக கட்டடத்தை திறந்தார் அமைச்சர்! - தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று (ஜூலை 27) திறந்து வைத்தார்.

அமைச்சர் எ.வ. வேலு
அமைச்சர் எ.வ. வேலு

By

Published : Jul 28, 2021, 6:06 AM IST

திருவண்ணாமலை: முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதி அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று முடிந்தது.

அதனை நேற்று (ஜூலை 27) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருவண்ணாமலை தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இந்த அலுவலகத்தில் பல்வேறு சான்றிதழ்கள் விண்ணப்பிப்பதற்கு தேவையான படிவங்கள் இலவசமாக வழங்கப்படும்.

ஜெராக்ஸ் இலவசமாக பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அலுவலகத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் எ.வ. வேலு

இந்த ஆண்டு முதல் இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்காக பயிற்சி மையத்தை தொடங்க உள்ளது. மேலும் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். திருவண்ணாமலையில் புதிதாக மத்திய பேருந்து நிலையம் அமைக்க தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் எதிராளியை கடிக்க பாய்ந்த குத்துச்சண்டை வீரர்

ABOUT THE AUTHOR

...view details