திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆதனுர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதனுர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டுவருகிறது. இந்தச் சங்கத்தின் மூலம் ஆதனுர், கீழையூர், விருபாட்சிபுரம், உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த 400 உறுப்பினர்களிடமிருந்து தினமும் காலை, மாலை நேரங்களில் இரண்டு வேளையும் சுமார் சுமார் 3000 லிட்டர் வரையில் உற்பத்தி செய்த பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒருமாத காலமாக ஆதனுர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்த பாலை முழுமையாக கொள்முதல் செய்யாமல் 70 விழுக்காடு பாலை மட்டும் கொள்முதல் செய்துகொண்டு மீதம் உள்ள பாலை திருப்பி கொடுத்து விடுவதாக உற்பத்தியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.