கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்திய ஊரடங்கு, பல தளர்வுகளுடன் ஐந்தாவது முறையாக ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுபோக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துவந்தனர். இதற்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த மே ஒன்றாம் தேதி முதல் மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளர்கள்! - புலம்பெயர் தொழிலாளர்கள்
திருவண்ணாமலை: ஊரடங்கால் சிக்கித் தவித்துவந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 74 பேர், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஊரடங்கால் வேலையின்றி பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்தை சந்தித்துவந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 74 பேர், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், பிகார், மத்திய பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த 74 குடிபெயர்ந்த தொழிலாளர்களை மூன்று போருந்துகள் மூலம் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.