தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்காக காத்திருக்கும் வணிகர் சங்க நிர்வாகிகள்! - thiruvannamalai news

திருவண்ணாமலை: தமிழ்நாடு முழுவதும், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்காக வணிகர் சங்க நிர்வாகிகள் கடைகளை திறக்க காத்திருக்கின்றனர்.

shop close
shop close

By

Published : May 11, 2020, 1:49 PM IST

கரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போது, ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து, டீக்கடை உள்ளிட்ட 34 வகையான கடைகளை திறந்துகொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது.

திறக்கப்படாமல் கிடக்கும் கடைகள்

தளர்வுகள் அறிவித்தாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்கறிக் கடை, நகைக்கடை துணிக்கடை உள்ளிட்ட கடைகளை திறக்க முன்வரவில்லை என்பதே நிதர்சனம். மக்களின் வருகை இல்லாமல் எவ்வாறு கடையை திறப்பது என்பதே கடை உரிமையாளர்களின் கேள்வியாக உள்ளது. இருப்பினும், ஒரு சில டீக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

வெறிச்சோடி காணப்படும் கடை வீதி

கடைகள் திறக்கப்படாவிட்டாலும், வணிக நிறுவனங்கள் அனைத்தும், திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர். அவரது அறிவிக்குப் பின்னரே, வணிக நிறுவனங்களான துணிக் கடை, நகைக் கடை மற்றும் காய்கறி கடைகளை திறப்போம் என்று திருவண்ணாமலை மாவட்ட வணிகர்கள் சங்க தலைவர் தனக்கோடி தெரிவித்துள்ளார்.

திறக்கப்படாமல் இருக்கும் கடைகள்

இதையும் படிங்க:அதிமுக பிரமுகர் வெறிச்செயல்: எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் கலங்கவைக்கும் வாக்குமூலம்!

ABOUT THE AUTHOR

...view details