திருவண்ணாமலை: செங்கம் வட்டம் செ.அகரம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், மேல்மருவத்தூர் கோயிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலவேடு கிராமம் அருகே சென்ற வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி விபத்துள்ளானது.இதில் 12 பேர் காயம் அடைந்தனர்.
மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயிலுக்கு சென்ற வேன் விபத்து; 12 பேர் காயம்! - thiruvannamalai district news
திருவண்ணாமலை மாவட்டம் சாலவேடு அருகே மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயிலுக்கு பக்தர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானது.
மேல்மருவத்தூர் சென்ற வேன் விபத்து: 12 பேர் காயம்!
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து கீழ்கொடுங்காலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தனியார் பேருந்து ஓட்டுநர், கார் உரிமையாளர் இடையே கைகலப்பு