தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 12, 2021, 11:01 AM IST

ETV Bharat / state

பூ மார்க்கெட்டில் சமூக இடைவெளியை மறந்து குவிந்த கூட்டம்!

திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பூ மார்க்கெட்டில் தகுந்த இடைவெளியின்றி மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பூ மார்க்கெட்டில் சமூக இடைவெளி மறந்து குறித்த கூட்டம்
பூ மார்க்கெட்டில் சமூக இடைவெளி மறந்து குறித்த கூட்டம்

திருவண்ணாமலை:தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளுக்கு மட்டும் காலை 12 மணிவரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான இடத்தில் இருந்து பேருந்துநிலையங்கள் திறந்த வெளிகளுக்கு மாற்றப்பட்டுவருகின்றன.

திருவண்ணாமலையில் தற்காலிகமாக நகரின் மத்திய பேருந்து நிலையத்தில் மொத்த பூ மார்க்கெட் இன்று (மே.12) முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பகல் 12 மணி வரை மட்டும் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்கள் பூக்கள் விற்பனை ஆகாமல் நின்று விடுமோ என அச்சத்தில் சமூக இடைவெளியை மறந்து பூக்களை விற்பனை செய்ய கூட்டமாக குவிந்து நின்றனர்.

அங்கு கூடியிருந்த வியாபாரிகளும், விவசாயிகளும் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் முகக்கவசம் கூட சரியாக அணியாமல் இருந்தது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூக்களை வாங்கி கட்டி விற்பனை செய்ய முடியாது என்பதால் பூ விற்பனை மந்தமடைந்துள்ளது. இதனால் கிலோ 300 ரூபாய் 400 ரூபாய் என்று விற்று வந்த பூக்கள் இன்று 20 ரூபாய் 30 ரூபாய்க்குக் கூட கேட்பதற்கு ஆள் இல்லாமல் விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ’69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பில்லை’ - அமைச்சர் ரகுபதி

ABOUT THE AUTHOR

...view details