முன்னாள் எம்எல்ஏ மணிவர்மா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனது தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியில் சேரும் நிகழ்ச்சி, மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மணிவர்மா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தாய்க் கட்சிக்குத் திரும்பினார் முன்னாள் எம்எல்ஏ! - k.s.alagiri
திருவண்ணாமலை: முன்னாள் எம்எல்ஏ மணிவர்மா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனது தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்நிகழ்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேஎஸ் அழகிரி, மணிவர்மா காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைகிறார். அவருடன் 5,000 பேரும் இணைகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்ற முறையில் மணிவர்மா அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்கின்றேன் என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இந்த குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு முறையான சரியான திட்டம் எதுவும் எடப்பாடி அரசிடம் இல்லை என்று விமர்சித்த அவர், நீட் தேர்வைப் பொருத்தவரை தமிழ்நாடு மாணவர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் நான்கு சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என சுட்டிக்காட்டினார்.