திருவண்ணாமலை: தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கத்தால், கடந்த இரண்டு நாள்களாக ஆங்காங்கே சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில், மின் கம்பங்கள் சாய்ந்தது, மின் கம்பிகள் அறுந்து விழுந்தது, சுவர்கள் இடிந்து விழுந்தது, குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அதனை சரிசெய்யும் பணியில் வருவாய் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் திருவண்ணாமலை வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பியது. முன்னதாக ஏரியின் கரையைப் பலப்படுத்த பொதுப்பணி துறையினர் மூலம் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஏரியில் மழை நீர் நிரம்பியதைக் கண்ட பொதுப்பணி துறையினர், களங்கள் சுவற்றை உடைத்து மழை நீரை வெளியேறச் செய்தனர்.