திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (38). இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெங்களூரு - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் பெங்களூருவிலிருந்து திருவண்ணாமலை நோக்கி அதிவேகமாக வந்த கார், சரவணன் பைக் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
கார் மோதி விபத்து - இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை: கார் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சரவணன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், உடனடியாக விரைந்த வந்த காவல் துறையினர், சரவணனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கொள்ளையடித்த பணத்தில் விமானப் பயணம் - பைக்கில் வரும்போது சிக்கிய கொள்ளையர்!