தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன விலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது - இருசக்கர வாகனம் பறிமுதல்

திருவண்ணாமலை: வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதாக கைது செய்யப்பட்ட ஜெயகாந்தன்
வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதாக கைது செய்யப்பட்ட ஜெயகாந்தன்

By

Published : Apr 21, 2020, 10:59 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ராவந்தவாடி வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக, செங்கம் வனச்சரகர் ராமநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சுற்றி திரிந்தவரை வனத்துறையினர் மடக்கி பிடிக்க முயன்றபோது, அவர் வேட்டையாட வைத்திருந்த பொருள்களை எறிந்துவிட்டு, தப்பிக்க முயற்சித்தார்.

இதனையடுத்து காவல் துறையினர் அவரை மடக்கி பிடித்து அவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் செங்கம் அடுத்த ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பதும், வெகுநாள்களாக காட்டு விலங்குகளை வேட்டையாடி, அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது.

இதையும் படிங்க:சோதனைச் சாவடியில் சிக்கிய 336 மது பாட்டில்கள்!

ABOUT THE AUTHOR

...view details