கரோனா ஊரடங்கை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மணல் திருடும் கும்பல் ஒன்று, இரவு நேரங்களில் செங்கம் அடுத்த கரியமங்கலம் ஆற்றில் மணல் அள்ளுவதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில், செங்கம் காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா உத்தரவின் பேரில், துணை ஆய்வாளர் பூங்காவனம் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது; டிராக்டர் பறிமுதல் - மணல் கடத்திய ஒருவர் கைது
திருவண்ணாமலை: சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்த டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
மணல் கடத்தல்
அச்சமயம் செய்யாற்றில் கரியமங்கலத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவர், டிராக்டர் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தததைப் பார்த்த காவல் துறையினர், அவரைக் கையும் களவுமாகக் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு உபயோகப்படுத்திய டிராக்டரையும் அவர்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.