தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் போக்சோவில் கைது! - காவல்துறையினர் தீவிர விசாரணை

திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 41 வயதுடைய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

man-arrested-for-sexually-abusing-girl
man-arrested-for-sexually-abusing-girl

By

Published : May 21, 2020, 10:06 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கீக்களூர் கிராமத்தில் 5 வயது சிறுமியை 41 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட நபர்

விசாரணையின் முடிவில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபால்(41) என்ற நபர், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர், செங்கம் துணை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மதுபோதையில் தாக்குதல் - இளம்பெண் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details