தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக வந்துவிடக்கூடாது என்பதில் உறுதி! - எல்.முருகன் - திமுக

திருவண்ணாமலை: எக்காரணத்தை கொண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

murugan
murugan

By

Published : Mar 6, 2021, 7:41 PM IST

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன், “நாகர்கோவிலில் நாளை நடைபெறும் பேரணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து, மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் விதமாக வீட்டு தொடர்பு என்கிற நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைக்கிறார்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் எங்களது ஒரே இலக்கு. மேலும், இத்தேர்தலில் திமுகவை எக்காரணத்தை கொண்டும் சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். திமுக தமிழகத்திற்கு எதிராகவும், தமிழர்களின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

திமுக வந்துவிடக்கூடாது என்பதில் உறுதி! - எல்.முருகன்

இதையும் படிங்க:மதிமுகவுக்கு 6 தொகுதிகள் - உதயசூரியன் சின்னத்தில் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details