தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீண்ட நாள்களுக்குப் பிறகு 100 நாள் வேலை திட்டம்: பெண்கள் மகிழ்ச்சி! - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை: நொச்சிமலை அருகே நீண்ட நாள்களுக்குப் பிறகு நூறுநாள் வேலை திட்டம் தொடங்கியதால் பெண்கள் உற்சாகத்துடன் பணியில் ஈடுபட்டனர்.

நூறுநாள் வேலை திட்டத்தால் பெண்கள் மகிழ்ச்சி
நூறுநாள் வேலைத்திட்டம் தொடக்கம்

By

Published : Jun 3, 2020, 7:45 PM IST

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ஊரடங்கு உத்தரவால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நூறுநாள் வேலை திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

அந்த வகையில் திருவண்ணாமலை அடுத்த நொச்சிமலை கிராமத்தில் உள்ள அஸ்த நீர்வரத்து கால்வாயில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி, முகக்கவசங்கள் அணிந்து நூறுநாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் கால்வாயை ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

முன்னதாக நொச்சிமலை ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம் நூறுநாள் வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் கரோனா தொற்று பரவுவதால் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து நூறுநாள் வேலையில் ஈடுபட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

கரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மூன்று மாத காலமாக நடைமுறையில் இருந்த நிலையில், வாழ்வாதாரம் இல்லாமல் கிராமப்புற பெண்கள் உணவுக்குக்கூட வழியில்லாமல் தவித்துவந்தனர். இந்நிலையில், இன்றுமுதல் நூறுநாள் வேலை உறுதியளிப்புத் திட்டம் தொடங்கப்பட்டதால் பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும், தமிழநாடு முதலமைச்சர் நூறுநாள் வேலை பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தற்போது ஒருநாள் கூலியாக ரூபாய் 256 வீதம் வழங்கப்படும் என்றும் அந்தத் தொகையை, வேலை செய்பவர்களின் வீடுகளுக்கே எடுத்துச் சென்று வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதால் பெண்கள் உற்சாகத்துடன் வேலைசெய்துவருகின்றனர்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு நூறுநாள் வேலை வழங்கியதால் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஏரியின் ஓடை தூர்வாரும் பணியில் பெண்கள் ஆர்வமாக ஈடுபட்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details