திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பௌர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஒவ்வொரு மாதம் பௌர்ணமி அன்று சுமார் 5 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் மேற்கொள்வார்கள். ஐப்பசி மாத பௌர்ணமி நேற்று 7ஆம் தேதி மாலை 4.45 மணிக்கும் தொடங்கி இன்று எட்டாம் தேதி மாலை 4.48 மணி வரை உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
இந்த மாதம் ஐப்பசி மாத பொளர்ணமியையொட்டி நேற்று நண்பகல் முதல் உள்ளுர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தினை சேர்ந்த பல லட்சக்கணக்காண பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர் மேலும் நேற்று அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றதால் மாலை 3 மணி முதல் 6 மணி வரை கோயிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அன்னாபிஷேகம் முடித்தவுடன் பக்தர்கள் தரிசனத்திற்காக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:இலங்கை கடற்படை கைது செய்த 15 மீனவர்களை விடுதலை செய்ய முதலமைச்சர் கடிதம்