தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் வங்கியில் ரூ 1.5 கோடி மதிப்புள்ள நகைகள் மாயம் - போலீசார் விசாரணை! - officials enquired

திருவண்ணாமலை: பிரபல தனியார் வங்கியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி

By

Published : Jun 5, 2019, 12:06 AM IST

திருவண்ணாமலை சன்னதி தெருவில் இயங்கி வரும் பிரபல தனியார் வங்கியில் மக்கள் தங்களின் நகைகளை அடமானம் வைத்துள்ளனர்.கடந்த வாரம் அந்த தங்க நகைகளை சரிபார்க்கும் பணி நடைபெற்றபோது சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மாயமானது என புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நகை காணாமல் போனது பற்றி வங்கி நிர்வாகிகள் காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி கடந்த சில தினங்களாக வங்கி அலுவலர்கள், மேலாளர் உட்பட 5 பேரிடம் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார். இதை அறிந்த வங்கி நிர்வாகம் வங்கியில் பணிபுரிந்த பல்வேறு நபர்களை பணிமாற்றம் செய்துள்ளதாகவும், ஒன்றரைக் கோடி ரூபாய் தங்க நகைகள் மாயமானது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொள்ளையடிக்கப்பட்ட வங்கி

ABOUT THE AUTHOR

...view details