தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவமானப்படுத்தப்பட்டுள்ளார்' : கே.எஸ்.அழகிரி

திருவண்ணாமலை: குஜராத் கலவரத்தில் பாஜகவினருக்குத் தண்டனை கொடுத்த காரணத்திற்காக உயர் நீதிமன்ற நீதிபதி அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி

By

Published : Sep 10, 2019, 1:25 PM IST


திருவண்ணாலை அருகே கட்சி நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”குஜராத் கலவரத்தில் விடுவிக்கப்பட்ட பாஜகவினருக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்த ஒரே காரணத்திற்காக 70 நீதிபதிகளுக்கு தலைமை வகித்த தஹீல் ரமாணியை அவமதிக்கும் வகையில், அவமானப்படுத்தும் வகையில் 4 நீதிபதிகளுக்கு தலைமை வகிக்கும் வகையில் இடமாற்றம் செய்து கீழ்மைப்படுத்தும் செயல். இதனால் அவர் பதவி விலகியதற்குப் பாராட்டுகள்.

சீனாவின் துயரம் மஞ்சள் நதி என்பதுபோல், இந்தியாவின் துயரம் கடந்த 5 ஆண்டு காலமாக தொடரும் பாஜக ஆட்சி. தற்போது இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி என்ற சுனாமி வீசுகிறது. நாட்டில் ஆட்டோ மொபைல் துறையில் நிகழும் வேலையின்மையை கையாள வழி தெரியாமல் அதிகாரிகள் விழிக்கின்றனர் என்றார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஏதாவது செய்துள்ளாரா என்று பார்த்துதான் வெற்றியா தோல்வியா என முடிவு சொல்லமுடியும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details